உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 12

இதே நாளில் அன்று: நவ. 12

நவம்பர் 12: திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில், ரா.மு.சுப்பிரமணிய பிள்ளை – மகமாயி அம்மாள் தம்பதியின் மகனாக, 1920-ல் இதே நாளில் பிறந்தவர், ரா.சு.கிருஷ்ணசாமி. பாளையங்கோட்டை துாய சவேரியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்; கல்லுாரி செல்லவில்லை. வேளாண் துறையில் பணியாற்றினார். இலக்கிய ஆர்வத்தால், அரசு பணியை துறந்து, 1939- முதல், ‘வல்லிக்கண்ணன்’ என்ற புனைப் பெயரில் முழுநேர எழுத்தாளரானார். ‘நவசக்தி, சினிமா உலகம், கிராம ஊழியன், ஹனுமான்’ உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றினார். பல முன்னணி தமிழ் பத்திரிகைகளில் பணியாற்றி, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, இலக்கிய திறனாய்வு என, 50-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவ ராக திகழ்ந்தார். இலக்கிய சேவைக்காக சாகித்ய அகாடமி, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். ‘தமிழ் இலக்கிய உலகின் பீஷ்மர்’ என்று போற்றப்படும் இவர், 2006-, நவம்பர் 9-ம் தேதி தன், 85வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை