உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 7

இதே நாளில் அன்று: நவ. 7

நவம்பர் 7: வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே காங்கேயநல்லுாரில், மல்லையதாசர் – கனகவல்லி அம்மையார் தம்பதியின் மகனா க 1906, ஆகஸ்ட் 25ல் பிறந்தவர், கிருபானந்த வாரி. தந்தையிடமே தமிழ் இலக்கணம், இலக்கியம், புராணங்கள், இசை ஆகியவற்றை கற்றார். முறையான கல்வி பயிலாத இவர், 8 வயதிலேயே கவிதைகள் இயற்றும் திறன் பெற்றிருந்தார். தீவிர முருக பக்தரான இவர், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழ் இலக்கியம், சைவ சித்தாந்தம், கந்தபுராணம், திருப்புகழின் கருத்துக்களை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்த்தார். ‘திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாத இதழை தொடங்கி பல ஆண்டுகள் நடத்தினார். முருக பெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக, ‘திருமுருக கிருபானந்த வாரியார்’ என அழைக்கப்பட்டார். பல நுால்களை எழுதியதுடன், கோவில் திருப்பணிகள், குடமுழுக்கு பணிகளிலும் ஈடுபட்டார். ‘அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி’ என போற்றப்பட்டார். கடந்த 1993 நவம்பர் 7ம் தேதி, தன் 87வது வயதில் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பும்போது காலமானார். கடந்த 2021 முதல் இவரது பிறந்த நாள், தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை