மேலும் செய்திகள்
இதே நாளில் அன்று: அக். 29
29-Oct-2026
நவம்பர் 8, 1680 ஐரோப்பிய நாடான இத்தாலியில், 1680ல் இதே நாளில் பிறந்தவர், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. சொந்த ஊரிலும், மான்டுவா நகரிலும் கல்வி பயின்றார். ராவென்னா, போலோனா ஆகிய இடங்களில் இயேசு சபை சார்ந்த சமயப் பயிற்சி பெற்றார். பின், இயேசு சபையில் இணைந்து குருவானார். 1710-ல் இந்தியா வந்து, மதுரை பகுதியில் சமயப் பணியை தொடங்கினார். சுப்ரதீபக் கவிராயரிடம் முறைப்படி தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார். தமிழின் முதல் அகராதியான, ‘சதுரகராதி’யை தொகுத்த பெருமை இவரையே சாரும். தமிழ் மீதான ஆர்வத்தால், தன் பெயரை முதலில் தைரியநாதர் எனவும், பின்னர் வீரமாமுனிவர் எனவும் மாற்றிக் கொண்டார். ‘தேம்பாவணி, பரமார்த்த குரு கதைகள், தொன்னுால் விளக்கம்’ உள்ளிட்ட நுால்களை எழுதினார். தமிழ் உரைநடை, இலக்கிய வளர்ச்சி, அகராதி துறைக்கு முக்கிய பங்களிப்புகளை செய்தார். திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தார். தமிழில் மெய்யெழுத்துக்களை குறிக்கும் புள்ளி முறையை பரவலாக்கிய இவர், 1747 பிப்ரவரி 4ல், கேரள மாநிலம் அம்பலக்காடு பகுதியில், தன் 66-வது வயதில் காலமானார். தமிழ் உரைநடையின் தந்தை பிறந்த தினம்!
29-Oct-2026