உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 20

இதே நாளில் அன்று: அக். 20

அக்டோபர் 20, 1909 திருச்சி மாவட்டம், குளித்தலையில், மீனாட்சி சுந்தரம் முதலியார் – ராஜாம்பாள் தம்பதியின் மகனாக, 1909ல் இதே நாளில் பிறந்தவர், மீ.கல்யாணசுந்தரம். தன் 6 வயதில், கிருஷ்ண அய்யரின் இம்தாதி பள்ளியில் தமிழ், ஆங்கிலம் கற்க தொடங்கினார். பள்ளி படிப்பை முடித்த பின், சட்டம் பயின்று வழக்கறிஞராகி பொதுவாழ்வில் ஈடுபட்டார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய துடன், தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க வளர்ச்சி யிலும் பங்காற்றினார். ரயில்வேயில் பணியாற்றியபடி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, 1940ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 1952 -– 1967 வரை, தமிழக சட்டசபை உறுப்பினராக பணியாற்றினார். இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலராகவும் இருந்தார். லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்த காலங்களில், தொழிலாளர்கள் நலனுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். தமிழகத்தில் இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு பங்களித்த இவர், தன் 78 வயதில், 1988 ஜூன் 20ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை