மேலும் செய்திகள்
தேர்தல் வராததால் ரொக்கப்பரிசு இல்லை
10-Jan-2025
சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், 17வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெய்சங்கர் பேசும்போது, 'பழனிசாமி முதல்வராக இருந்த போது, பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, வழங்கப்படவில்லை' என்றார்.இதற்கு பதிலளித்து, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பேசிய போது, 'பழனிசாமி முதல்வராக இருக்கும் போது, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது சரி. ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இந்த ஆட்சியில், மகளிருக்கு மாதந்தோறும், 1,000 வீதம், 12,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், 2,500 ரூபாயை கழித்தால் கூட, கூடுதலாக, 9,500 ரூபாய் வழங்கியிருக்கிறார்' என்றார்.இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அட, இது புது கணக்கா இருக்கே...' எனக் கூற, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
10-Jan-2025