வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவரை யாராவது கேட்டார்களா? தானே 'அப்பன் குதிருக்குள்ளே இல்லை' என்று எல்லாருக்கும் தன் நோக்கத்தை கூறிவிட்டார்
மேலும் செய்திகள்
'விக் வச்சு யூத்தா மாறிட்டாரோ?'
28-Mar-2025
தமிழக காங்., கட்சியின் தேர்தல் நிதி குழு உறுப்பினர் தி.நகர் ஸ்ரீராமின் 59வது பிறந்தநாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப்பில் நடந்தது. விழாவில் கேக் வெட்டி, மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது உட்பட பலர் பங்கேற்றனர். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி போன்றவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். விழாவிற்கு வந்த நிர்வாகிகளிடம் தி.நகர் ஸ்ரீராம் பேசுகையில், 'வழக்கமாக, பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடுவேன். இந்த ஆண்டு தான் கட்சி நிர்வாகிகளை அழைத்தேன். பதவி வாங்கவோ அல்லது சட்டசபை தேர்தலில் சீட் வாங்கவோ பிறந்த நாளை கொண்டாடவில்லை' என்றார். மூத்த தொண்டர் ஒருவர், 'அரசியல்ல பதவி ஆசை இல்லேன்னு சொன்னா, இருக்குன்னு அர்த்தம்...' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
இவரை யாராவது கேட்டார்களா? தானே 'அப்பன் குதிருக்குள்ளே இல்லை' என்று எல்லாருக்கும் தன் நோக்கத்தை கூறிவிட்டார்
28-Mar-2025