உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஆதர்ச தம்பதின்னு சொல்லுங்க!

ஆதர்ச தம்பதின்னு சொல்லுங்க!

மதுரை, பரவையில் நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பங்கேற்றார். ஜாலி மூடில் இருந்த அவரிடம், காதலர் தினம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.'இதைத்தான் எதிர்பார்த்தேன்' என்பது போல உற்சாகமான செல்லுார் ராஜு, 'இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன். எங்கு சென்றாலும், அவரையும் அழைத்துச் செல்கிறேன். என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள்' என்றார்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'ஆமாப்பா... ஒவ்வொரு தடவையும் மதுரையை விட்டு ராஜு வெளியூர் டூர் கிளம்பினார்னா, மனைவியையும் அழைச்சிட்டுப் போகாம இருக்க மாட்டாரு... இரண்டு பேரும் ஜோடியாக சுற்றும் போட்டோக்கள் ரொம்பவே பேமஸ்' எனக் கூற, மற்றொரு நிருபர், 'இந்த வயசுலயும் காதல் குறையாம இருக்காங்களே... ஆதர்ச தம்பதின்னு சொல்லுங்க...' என, 'கமென்ட்' அடிக்க, நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
பிப் 22, 2025 21:08

வந்தபின் போராடும் அவஸ்தையை விட வரும் முன் காப்பதே உசித்தம்.


D.Ambujavalli
பிப் 22, 2025 06:48

மனைவி கூட வருவது வேறு ‘காரணத்துக்காகக் ‘ கூட இருக்கலாமே


புதிய வீடியோ