உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நடிக்க தயாராகிடுவாங்க!

நடிக்க தயாராகிடுவாங்க!

கோவையில் நடந்த, 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மாணவர்களுக்கு, 'டெபிட்' கார்டு வழங்கினார். முதல்வர் நிகழ்ச்சிக்கு வரும் முன், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் செயலர் ஜெயஸ்ரீ முன்னிலையில், மேடையில், 'ரிகர்சல்' பார்க்கப்பட்டது. முதல்வராக மாநகராட்சிகமிஷனர் சிவகுரு பிரபாகரனையும், அமைச்சராகஉதவி கலெக்டர் அங்கித்குமாரையும் நிற்க வைத்தனர்.'டெபிட்' கார்டு அட்டையை கலெக்டர்கிராந்திகுமார் பெற்று, முதல்வரிடம் கொடுத்து, மாணவர்களிடம் வழங்குவது போல், மாணவர்களை வரவழைத்து, அவர்களிடம் கொடுத்து, 'ரிகர்சல்' பார்த்தனர். இதை பார்த்த ஒருவர், 'அடேங்கப்பா... இதே மாதிரி பயிற்சி அளித்தால், நம்ம பசங்க சினிமாவுல நடிக்கிற அளவுக்கு தயார் ஆகிடுவாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 25, 2024 17:02

குடியரசுத்தலைவர் விருது வழங்கும் விழா லெவலுக்கு இந்த டெபிட் கார்டுக்கு இத்தனை அலப்பறையா ?


சமீபத்திய செய்தி