உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ரோட்டுல தான் நிற்கணும்!

ரோட்டுல தான் நிற்கணும்!

புதுக்கோட்டையில், ஒரு திருமண விழாவில் பங்கேற்கவந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் தற்போதுநல்லாட்சி நடப்பதால், அதை காமராஜர் ஆட்சி என, இளங்கோவன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகம் இல்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ, அதற்கு பெயர் தான் காமராஜர்ஆட்சி.'தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காமராஜர்ஆட்சி நடைபெறுகிறது. காமராஜர் ஆட்சிக்கான தேவைகள் இருப்பதால் தான், காங்கிரசை சேர்ந்த நாங்களும் ரோட்டில் நிற்கிறோம்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைபிடிக்கணும்னு நினைச்சா, இவர் சொல்ற மாதிரி ரோட்டுலதான் நிற்கணும்... திராவிட கட்சிகள் கூட்டணி இல்லைன்னா சட்டசபைக்குள்ள போறதை மறந்துடவேண்டியது தான்...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 14, 2024 18:51

காமராஜர் எத்தனை கார் வைத்திருந்தார் ? எத்தனை ஆயிரம் கோடிகள் சொத்து சேர்த்தார் ? இனி அந்த வார்த்தையை கூற எந்தக்கட்சிக்கும் தகுதி இல்லை


selva kppk
செப் 14, 2024 07:25

ரிப்போர்ட்டர் முணுமுணுக்கும்போது இவர்கள் பக்கத்தில் இருந்தார்கள்.


புதிய வீடியோ