வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தண்ணீரும் இல்லை மணலும் இல்லை.
மேலும் செய்திகள்
'நாட்டு நடப்பே தெரியலையே!'
16-Oct-2025
பா.ம.க., சார்பில், தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம், கோவை சித்தாபுதுாரில் நடந்தது. இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசும்போது, 'அத்திக்கடவு- - அவிநாசி திட்டத்தில், முக்கியமாக உள்ள, கிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு சென்று பார்த்தேன்; அந்த தடுப்பணையில், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. நொய்யல் ஆறு இன்று சாக்கடையாக மாறியுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒவ்வொரு ஆறாக செத்துக் கொண்டிருக்கிறது. 'சென்னை கூவம் ஆறு, அடையாறு ஆறு, நொய்யல், தாமிரபரணி, வைகை ஆகிய ஆறுகள் சாக்கடையாக மாறியுள்ளன. நீர் மேலாண்மை என்றால், ஒரு மாதம் பெய்யும் மழையை, அடுத்த 11 மாதங்கள் பயன்படுத்துவது தான். இது தெரியாமல், எப்படி நீர்வளங்களை காப்பாற்றுவர்...?' என்றார். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'நதிகளை நாசமாக்கியது தான், திராவிட கட்சிகளின் சாதனை போலும்...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
தண்ணீரும் இல்லை மணலும் இல்லை.
16-Oct-2025