வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உங்கள் ஆட்சிவந்தால் உங்கள் மகனுக்கு கொண்டாட்டம் தான்
இவர்களின் பொதுச்செயலாரையே அமாவாசை என்று, அவர் பதவிக்கு வந்த நிகழ்வை வைத்து அழைக்கிறார்களே இந்த 'அமாவாசை' கெடு வைப்பது இவர்கள் கட்சியின் தாரக மந்திரமோ ?
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதுபோல, அ.தி.மு.க., எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், முதல்வர் ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், வலுவான கூட்டணி அமைந்ததும், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. 'அவர்கள் செய்த லஞ்ச, ஊழல்களுக்கு எந்த சிறைக்கு செல்வர் என, சொல்ல முடியாது. அந்தளவு லஞ்ச, ஊழல் சாக்கடையில் தி.மு.க., மூழ்கி விட்டது. அந்த கட்சி தலைவருக்கு அ.தி.மு.க.,வை விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை. அவர்களது ஆட்சி இன்னும், 10 அமாவாசைகளில் வீட்டுக்கு செல்லும்...' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'பத்து அமாவாசை முடிஞ்சதும், பவுர்ணமி மாதிரி அ.தி.மு.க., ஆட்சி மலரும்னு நினைக்கிறாரோ...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.