வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமைதியை சீர் குலைக்க வந்தவர்கள் எப்படி? அப்படி நுழைந்தவர்களை பிடித்து நைய்ய புடைக்கணும்
மேலும் செய்திகள்
'ஊழல் பெருச்சாளிகளை சொல்றாரே?'
20-Jul-2026
'அமைச்சர் கனவில் இருக்காங்களோ?'
12-Jul-2026
பா.ஜ., தமிழக பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம், சமீபத்தில் திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க, பா.ஜ., அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி, இளைஞர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர். அதனால், வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். 'மாணவர்கள் உரிமைக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால், போராடக்கூடியவர்கள் மாணவர்கள் தானா அல்லது அமைதியை சீர்குலைப்பவர்கள் ஊடுருவி இருக்கின்றனரா என்று ஆய்வு செய்ய வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியை நீக்க வேண்டும் என்பதற்காக, உலக அளவில் மிகப்பெரிய சதி நடக்கிறது. நாட்டை சீர்குலைக்கும் முயற்சியை மாணவர்கள் உணர வேண்டும்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'உள்நாட்டில் மோடியை வெல்ல முடியாதவங்க, வெளிநாட்டு உதவிகளைத் தேடி ஓடுறாங்களோ?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
அமைதியை சீர் குலைக்க வந்தவர்கள் எப்படி? அப்படி நுழைந்தவர்களை பிடித்து நைய்ய புடைக்கணும்
20-Jul-2026
12-Jul-2026