| ADDED : பிப் 10, 2026 03:15 AM
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு தனித்தனியே சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. சிலம்ப போட்டிகளை துவக்கி வைத்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இடைவேளையின்போது அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியரிடம் விளையாட்டு விதிமுறைகள், செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார். அடுத்து, கோ-கோ போட்டியை பார்வையிட்டவர், போட்டி நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை பொறுமையாக கேட்ட பின், புறப்பட்டு சென்றார். அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், 'கமிஷனர், இவ்வளவு பொறுமையா விளையாட்டு போட்டிகள் பற்றி கேட்டு தெரிஞ்சிட்டு போறாரே... மாநகராட்சி ஊழியர்களுக்கும் ஏதாவது விளையாட்டு போட்டிகள் நடத்த போறாரோ...?' என முணுமுணுக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்தனர்.