உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எடுத்தது பாலாஜி; கொடுத்தது கமல்!

எடுத்தது பாலாஜி; கொடுத்தது கமல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின், 63-வது பிறந்த நாள் விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்று, திருமாவளவனை வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன், மேடையில் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார். திருப்போரூர் தொகுதி, வி.சி., கட்சி எம்.எல்.ஏ.,வான, எஸ்.எஸ்.பாலாஜி, தன் சொந்த பணத்தில், 1 கிலோ வெள்ளியில் தங்க முலாம் பூசிய செயினும், அதில் திருமாவளவனின் தாய், தந்தை படத்துடன், 'டாலர்' இடம் பெற்ற பரிசும் தயார் செய்திருந்தார். கமலிடம் செயினை வழங்கிய பாலாஜி, அதை திருமாவளவன் கழுத்தில் அணிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். கமலும் செயினை வாங்கி, திருமாவளவன் கழுத்தில் போட்டு, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்தார். மேடையின் கீழே அமர்ந்திருந்த தொண்டர் ஒருவர், 'செயினை செஞ்சது பாலாஜி... கொடுத்து வச்சது கமலுக்கு...' என, 'ரைமிங்'காக, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ