உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பழுத்த மரத்தில் வவ்வால்கள்!

 பழுத்த மரத்தில் வவ்வால்கள்!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், சமீபத்தில் மதுரையில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டு, சிலர் எதிரியிடம் சரணாகதி அடைந்துள்ளனர். நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ்., உள்ளிட்டோர், ஜெயலலிதா காலத்தில் இவ்வாறு வெளியேறி மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பிய வரலாறு உண்டு. அதுபோல, முன்னாள் அமைச்சர்களுக்கு தெளிவு கிடைக்கும் போது மீண்டும் வருவர். 'எத்தனை விஜய் வந்தாலும் சந்திக்கும் தெம்பு, அ.தி.மு.க.,வுக்கு உண்டு. அதிகாரத்திற்கு வரும் முன் கூவி அழைத்தீர்கள். 'லெட்டர் பேடு' கட்சிகள் கூட உங்களை நம்பி வரவில்லை. மாயாஜாலம் போல் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது. அதிகாரத்தை தேடி தற்போது உங்களிடம் வருகின்றனர்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'பழுத்த மரம் நோக்கிதான் வவ்வால்கள் போகும் என்பது அரசியலுக்கும் பொருந்துமே' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 15, 2026 19:38

விஜய் கட்சிக்கு தாவும் பேர்வழிகள் உடனே அதிகாரத்தை பிடிக்க முடியாவிட்டாலும் அதுவரை மந்திரிகள் அதிகாரிகளை பிடித்து முடிந்தவரை பண ஆதாயம் பெறவே முயற்சிப்பார்கள்.


D.Ambujavalli
ஜூன் 15, 2026 07:31

சில. 'போன. மச்சான்கள் '. அந்த. முகாமில். காசு. தேறும்படி பதவிக்கும். வாய்ப்பில்லை. என்றதும். திரும்புகிறதை. அன்றைய. எம்.ஜி.ஆர். ஆட்சியுடன் ஒப்பிடலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை