| ADDED : அக் 11, 2024 09:44 PM
சொத்து வரி உயர்வைக் கண்டித்து, மதுரையில் அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவிடம், 'பா.ஜ., தலைவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் உங்களை, அக்கட்சி எச்சரித்து உள்ளதே... நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளதே' என நிருபர்கள் கேட்டதற்கு, 'அண்ணாமலை குறித்து நான் விமர்சிக்கவில்லை. தலையை ஆட்டும்போது, என்னப்பா ஆட்டுக்குட்டி மாதிரி ஆட்டுறேன்னு கேட்போம்ல.'அப்படித்தான் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை பார்த்து, என்னப்பா ஆட்டுக்குட்டி மாதிரி தலையாட்டுறீங்கன்னு கேட்டேன்...' எனக் கூறியவர், சட்டென, 'டிராக்' மாறி, 'ஏம்ப்பா... நாங்கள் போருக்கு போகிறோம்; நீங்க எலி பிடிப்பதை பற்றி பேசிட்டு இருக்கீங்க' என, வேறு விஷயம் பேசத் துவங்கி விட்டார்.நிருபர் ஒருவர், 'ரொம்பவும் உஷாரா தான் இருக்காரு...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.