உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘எம்.பி., பெயரை வாங்கிட்டாங்களே!’

‘எம்.பி., பெயரை வாங்கிட்டாங்களே!’

சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், 21வது வார்டு த.வெ.க., ஆதரவு கவுன்சிலர் ராஜேஷ் சேகர் பேசுகையில், ‘என் வார்டில் எம்.பி., நிதியில் புதிய பள்ளி கட்டடம் கட்டிக் கொடுத்ததற்கு நன்றி’ என்றார். குறுக்கிட்ட மண்டல குழு தலைவர் ஆறுமுகம், ‘எந்த கட்சி எம்.பி.,ன்னு தெளிவாக கூறுங்கள்’ என்றார். அருகே அமர்ந்திருந்த தி.மு.க., கவுன்சிலர்களும், ‘எந்த எம்.பி.,ன்னு சொல்லுங்க’ என விடாப்பிடியாக கேட்டனர். உடனே, ‘தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிக் கொடுக்கப்பட்டது’ எனக் கூறி ராஜேஷ் சேகர், நன்றி தெரிவித்தார். இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘கவுன்சிலர் அப்படியே நழுவிடலாம்னு பார்த்தாரு. ஆனாலும், சுத்திவளைத்து அவர் வாயில் இருந்து எம்.பி., பெயரை வாங்கிட்டாங்களே’ எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ