வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விஜய்யின் தவெக வருகை திமுக வை பைத்தியமாகவே மாற்றிவிட்டது.மேலும் குடும்ப, வாரிசு அரசியல் அவர்கள் கூட்டத்திலேயே புகைய ஆரம்பிச்சாச்சு
திருச்சி மாவட்டம், துறையூரில் தி.மு.க., நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், துறையூர் எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நமது அடுத்த சரித்திரமான உதயநிதியை தலைவராக உருவாக்குவதற்கு இளம் பட்டாளங்கள் ஒன்றுதிரள வேண்டும். விஜய் வந்தாலும் சரி அல்லது அவரது அப்பா சந்திரசேகர் வந்தாலும் சரி... தி.மு.க.,வினரின், 'பீல்டு ஒர்க்'கை மீறி எவராலும் ஜெயிக்க முடியாது. 'திருமங்கலம் உட்பட பல தொகுதிகளில் தேர்தல்பணி செய்திருக்கிறோம். மாவட்டச் செயலரோ,எம்.எல்.ஏ.,வோ சரியில்லை என்று கூறுவோர் கூட, தேர்தல் நேரத்தில், கட்சிக் கொடியை நட்டுவிட்டால் போதும், தனிவேகத்துடன் வேலை செய்வர்...' என்றார். இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அதானே... திருமங்கலம் இடைத்தேர்தல்ல தானே, ஓட்டுக்குநோட்டு என்ற பார்முலாவை தி.மு.க., அறிமுகப்படுத்தியது... அதை மறக்க முடியுமா?' என, முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
விஜய்யின் தவெக வருகை திமுக வை பைத்தியமாகவே மாற்றிவிட்டது.மேலும் குடும்ப, வாரிசு அரசியல் அவர்கள் கூட்டத்திலேயே புகைய ஆரம்பிச்சாச்சு