உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘முருகனிடம் மனு போட்டிருப்பாரோ?’

‘முருகனிடம் மனு போட்டிருப்பாரோ?’

பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சமீபத்தில் திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின் அவர் அளித்த பேட்டியில், ‘கடந்த 2020ம் ஆண்டு கந்த சஷ்டி துவக்கத்தின் போது, பா.ஜ., தமிழக தலைவராக இருந்த நான், திருத்தணியில் வெற்றி வேல் யாத்திரையை தொடங்கி, திருச்செந்துார் முருகன் கோவிலில் முடித்தேன். ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளேன். ‘பிரதமர் மோடியின் கடின உழைப்பு, கனவு, லட்சியம் அனைத்தும், வரும் 2047ம் ஆண்டிற்குள் நிறைவேறி, வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாக வேண்டும் என முருகனிடம் பிரார்த்தனை செய்தேன்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவிகள் எல்லாம் இவரிடம் இருந்து பறிபோயிட்டதால, மறுபடியும் மாநிலத் தலைவர் பதவிக்கு கடவுள் முருகனிடம் மனு போட்டிருப்பாரோ?’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர், ‘இருந்தாலும் இருக்கும்’ என்றபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
நவ 16, 2026 20:38

போதும் போதும் அரசியல் வாழ்க்கை என்று. நிம்மதி. தேட. அதையே. வேண்டுதலாக்கி. வந்திருப்பாரோ, ?


Lakshminarasimhan
நவ 16, 2026 07:09

அந்த முருகபெருமானே காப்பாற்ற முடியாத தவறு செய்து விட்டாரோ ?