உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  தி.மு.க., களவாணி கார்!

 தி.மு.க., களவாணி கார்!

மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேட்டை கண்டித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தலைமையில், மதுரையில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், 'துணை முதல்வர் உதயநிதி, அ.தி.மு.க.,வை, 'இன்ஜின் இல்லாத கார்' என, கேலி செய்துள்ளார். 'இப்போதைய, தி.மு.க., ஆட்சியில் புதிய பாலம் திறப்பு விழா ஒன்று சமீபத்தில் நடந்தது. அப்போது, அதிகாரிகள், 'பாலத்தில் முதலில் வரும் காருக்கு பரிசு உண்டு' என கூறினர். பாலத்தை திறந்தவுடன், அதை திறந்து வைத்த, தி.மு.க., பிரமுகரின் குடும்பத்தினர் கார் தான் முதலில் வந்தது. விலை உயர்ந்த அந்த காருக்கான, 'ஆர்.சி., புக்' மற்றும், 'லைசென்சை' அதிகாரிகள் கேட்டனர்; அவை, அவர்களிடம் இல்லை. விசாரித்த போது, அது திருடப்பட்ட கார் என தெரிந்ததாம். அ.தி.மு.க., இன்ஜின் இல்லாத கார் என்றால், தி.மு.க., களவாணி கார்...' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'கார் கதையை வச்சே, உதயநிதிக்கு தக்க பதிலடி தந்துட்டாரே...' என கூற, அருகில் இருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
டிச 22, 2025 21:04

சரியாக சொல்லியுள்ளார் , அன்று பெண்களை விரட்டி கொலைமிரட்டல் விடுத்த கார் டோல்கெட்டில் பிரீ க்காக கொடியை கட்டுனாங்களாம்


Anantharaman Srinivasan
டிச 22, 2025 18:26

முடிந்திருந்தால் டிக்கெட்யில்லாமலேறி வந்த ரயிலேயே அமுக்கியிருப்பார். வாரிசு அடிப்படையில் பதவியை பிடித்தது அமர்ந்தவர்க்கு வேண்டாத ஆவணப்பேச்சு.


D.Ambujavalli
டிச 22, 2025 06:17

ரயில் பயணத்தில் ஆரம்பித்த களவாணித்தனம், இன்று களவு செய்த காரை, தாராளமாகப் பரிசளிக்குமளவு 'பரிணாம வளர்ச்சி' அடைந்துள்ளது