உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நாசுக்கா குத்தி காட்டுறாரோ?

 நாசுக்கா குத்தி காட்டுறாரோ?

சென்னை, அம்பத்துார் வியாபாரிகள் சங்கம் சார்பில், சமீபத்தில் ஆண்டு விழா நடந்தது. இதில், தமிழக சட்டசபை சபாநாயகர் பிரபாகர், வியாபாரிகள் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரபாகர் பேசுகையில், 'வியாபாரிகள், அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்; தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது; ஒரு பக்கம் சாயும் நிலைப்பாட்டோடு இருக்கக் கூடாது. இன்று செல்வாக்கோடு இருக்கலாம்; ஆனால், ஒருநாள் அனைத்தும் விழுந்து விடும்' என்றார். தி.மு.க., ஆதரவாளராக கருதப்படும் விக்கிரமராஜா, இதை எல்லாம் தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த வியாபாரி ஒருவர், 'விக்கிரமராஜாவின் மகன், கடந்த தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,வா இருந்தாரு... அதனால, இவரும் தி.மு.க.,வுக்கு ஆதரவாகவே இருந்தாரு... அதைத்தான் சபாநாயகர் நாசுக்கா குத்தி காட்டுறாரோ...?' என முணுமுணுக்க, சக வியாபாரிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி