உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / போலீசுக்கு சொல்லியா தரணும்?

போலீசுக்கு சொல்லியா தரணும்?

சபரிமலை அய்யப்ப சுவாமியை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடிய, இசைவாணி மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகத்தில்நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அய்யப்ப பக்தர்கள்கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர்.அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து சரணகோஷம் முழங்கியவாறு சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர், 'கலெக்டர்அலுவலகத்தில் சரணகோஷம் முழங்காதீர்கள்; கும்பலாக செல்லாதீர்கள்...' என, எச்சரித்தார்.பக்தர்கள், 'எங்கள் சுவாமியை நினைத்து கோஷம் போடுகிறோம்; எங்கள் கைகளில் இசைக்கருவிகளாஇருக்கின்றன...?' என, இன்ஸ்பெக்டரிடம் கேட்டனர்.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை உளவுப்பிரிவு போலீசார் வீடியோ எடுத்தனர். இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'திராவிட மாடல்ஆட்சியில், ஹிந்து பக்தர்களை எப்படி, 'டீல்' செய்யணும்னு நம்ம போலீசுக்கு சொல்லியா தரணும்...?' என முணுமுணுக்க, மற்றவர்கள் கமுக்கமாகசிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
டிச 05, 2024 13:42

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் உள்ளே நமச்சிவாயா சரணகோஷம் போடக்கூடாதென்று தடுத்த திராவிட அரசு தானே இது..


சமீபத்திய செய்தி