வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசியல் அடிதடிக்காகக் குடும்ப விழாவை ஏற்று நடத்த வேண்டியவர் ஒதுங்கி இருந்தது என்றும் பழி சேர்க்கும் அரசியலில் நாளை ஒன்று சேர்ந்தாலும் இது நீங்கா உறுத்தல்தானே
தர்மபுரி : தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'கடந்த, 2019 லோக்சபா தேர்தல் களத்தில், அன்புமணியை எதிர்த்து வெற்றி பெற்றேன். அப்போதே, அவரிடம் தலைமை பண்பு இல்லை என தெரிவித்தேன். தற்போது அதைத்தான், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் பேசி வருகிறார். பலருக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, 60வது திருமண நாள் விழா.'அதுபோன்ற அரிய வாய்ப்பு ராமதாசுக்கு கிடைத்த நேரத்தில், அதை பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியாக கொண்டாடும் வாய்ப்பை கூட அன்புமணி கொடுக்கவில்லை. அப்பாவுக்கே நன்றி இல்லாதவர், தொண்டர்களுக்கு என்ன செய்ய போகிறார். இதை, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இவருக்கு, 2024 லோக்சபா தேர்தலில் தலைமை சீட் தரலை... நானும் களத்துல இருக்கேன்னு காட்டி, வர்ற சட்டசபை தேர்தல்ல சீட்டுக்கு துண்டு போடுறாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
அரசியல் அடிதடிக்காகக் குடும்ப விழாவை ஏற்று நடத்த வேண்டியவர் ஒதுங்கி இருந்தது என்றும் பழி சேர்க்கும் அரசியலில் நாளை ஒன்று சேர்ந்தாலும் இது நீங்கா உறுத்தல்தானே