மேலும் செய்திகள்
அரசியல் நடிகர் விஜய்: பா.ஜ., விமர்சனம்
24-Aug-2025
நீலகிரி மாவட்டம், கேத்தி பகுதியில் விஷால் நடிக்கும், மகுடம் படப்பிடிப்பு நடந்தது. இதற்கு வந்த விஷால், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால், 2026 அரசியல் களம் வேறு மாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டட பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; செப்., இறுதி அல்லது அக்., மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும். 'விஜய் அரசியலுக்கு வந்து, இரண்டாவது மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள். நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன்...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் யாரும் நல்லது செய்றது இல்லைன்னு நாசுக்கா குத்தி காட்டுறாரோ...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
24-Aug-2025