உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இவருக்கு துாக்கமே வராதோ?

 இவருக்கு துாக்கமே வராதோ?

சிவகங்கையில், சீரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி, காங்., - எம்.பி., கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், கார்த்தி எம்.பி., பேசுகையில், 'மாவட்ட தலைநகரான சிவகங்கை நகராட்சி பகுதி முழுதும் குப்பை நிறைந்து காணப்படுவது, மாவட்ட தலைநகருக்கான அந்தஸ்தை இழக்க செய்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம், நகரை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 'மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி மட்டுமன்றி, நகர மக்களும், சிவகங்கையை துாய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார். விழாவில் பங்கேற்ற, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'இவருக்கு, நம்ம நிர்வாகத்தை குறை சொல்லாட்டி, துாக்கமே வராது போல...' என, அலுத்து கொள்ள, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
டிச 12, 2025 15:56

உள்ளதை உள்ளபடி சொன்னால் உடம்பு எரிவதேன்.? கூட்டணியிலிருந்து கொண்டே இடித்துக்கூறுவதற்கும் தனி தைரியம் வேண்டும்.


D.Ambujavalli
டிச 12, 2025 06:34

சமயம் பார்த்து நைசாக குறையையும் சுட்டிக்காட்ட முனைந்தால், கூட்டணி 'தர்மத்தை' எண்ணி, ஒரே நாறினாலும் மூக்கை பொத்திக்கொண்டு போகவேண்டும் என்கிறீர்களா ?