வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Graduates factory மாதிரி பட்டதாரிகளை ‘உற்பத்தி’ செய்தால் மட்டும் போதுமா ? மார்க்கெட்டில் அவர்களை துப்புரவுத்தொழில், டெலிவரி ஆட்கள் என்று இறங்கும் அளவு வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறதே
கோவை தனியார் கல்லுாரியில் நடந்த, 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி' எனும் உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பு முகாமில், கோவை கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர்.கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், 'நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை. அனைவரும் உயர்கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு உயரிய இலக்கை வகுத்து, அதை நோக்கிச் செல்ல வேண்டும். கல்வி கற்க வங்கிக்கடன் வசதி செய்து தரப்படும்' என்றார்.இதைக் கேட்ட மாணவர் ஒருவர், 'நல்ல விஷயம்...இதே மாதிரி வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதிலும் இலக்கு வைத்து அரசு செயல்படணும்...'என, முணுமுணுக்க, மற்றொரு மாணவர், 'எல்லாத்துக்கும் அரசை எதிர்பார்க்கக்கூடாது...' என, அறிவுரை வழங்கி நடையைக் கட்டினார்.
Graduates factory மாதிரி பட்டதாரிகளை ‘உற்பத்தி’ செய்தால் மட்டும் போதுமா ? மார்க்கெட்டில் அவர்களை துப்புரவுத்தொழில், டெலிவரி ஆட்கள் என்று இறங்கும் அளவு வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறதே