உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  குறைவா மதிப்பிட கூடாது!

 குறைவா மதிப்பிட கூடாது!

தமிழக சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ், சமீபத்தில் கோவை வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; அது ஜனநாயக உரிமை. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட தொடர் தோல்வியால், இன்னொரு முயற்சி எடுத்துள்ளனர். 'ஹிட்டான படம், 'ரீ ரிலீஸ்' ஆனாலே மக்கள் பார்க்க மாட்டார்கள். ஒரு சில நடிகர்கள் தான் விதிவிலக்கு. ஏற்கனவே, 'பிளாப்' ஆன படத்தை ரீ ரிலீஸ் செஞ்சா, அது எப்படி எடுபடும்னு தெரியல. கண்டிப்பா தோல்வி நிச்சயம் தான்' என்றார். அண்ணாமலை துவங்க இருக்கும் புதிய கட்சியை தான், பெயர் குறிப்பிடாமல் அருண்ராஜ் விமர்சிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட மூத்த நிருபர் ஒருவர், 'இப்படித்தான் த.வெ.க.,வையும் எல்லாரும் மதிக்காம இருந்தாங்க... இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாகலையா... அந்த மாதிரி, அண்ணாமலை கட்சியையும் இவர் குறைவா மதிப்பிட கூடாது' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 18, 2026 19:22

த வெ . க. வை. அமர. வைத்தபின். அத்துறையிலிருந்து. வந்த. முதல்வரை குளிர்ர்விக்க. எந்த. பேச்சிலும். சினிமாவின். தாக்கம். இருக்கும்படி. அமைச்சர்கள். கவனமாக. இருக்கிறார்கள். போலும்


கண்ணன்
ஜூன் 18, 2026 13:52

பாத்தீங்களா, இவரது அறிவு சினிமாவுடனே நிறைவு பெற்றது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை