உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பாதி பேர் கூட தேற மாட்டாங்க!

பாதி பேர் கூட தேற மாட்டாங்க!

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி, மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இந்தியாவில் கூட்ட நெரிசலில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. கரூரில், கூட்டத்தை நடத்திய, த.வெ.க.,வினர் கவனக்குறைவாக இருந்திருக்கின்றனர். வருவோரை கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட்டம் நடத்தியவர்களுக்கு நிர்வாக திறன் இல்லை; அந்த இயக்கத்துக்கே நிர்வாக திறன் இல்லை. 'த.வெ.க.,வுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகள் இல்லாத குறைபாடே கரூர் சம்பவத்திற்கு காரணம். விஜய்க்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவருக்கு ஆளுமை திறன் இருக்கிறதா என்பதில் தான் சந்தேகம்...' என்றார். இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆளுமை திறன் இருந்தால் தான், அரசியலுக்கு வரணும்னு இருந்தால், நாட்டில் பாதி தலைவர்கள் கூட தேற மாட்டாங்களே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ