உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எதிர்க்கட்சியா கூட வர முடியாது!

எதிர்க்கட்சியா கூட வர முடியாது!

கடலுார் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, தி.மு.க.,வினருக்கு தைரியம் இல்லை. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது. தி.மு.க.,வினர், 'வரும், 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்' என்கின்றனர். ஆனால், அவர்களால் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'எதிர்பார்த்த கூட்டணி அமையலைன்னா இப்ப இருக்கிற மாதிரி இவங்களால தான், எதிர்க்கட்சியா கூட வர முடியாது...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜன 27, 2025 06:40

அது என்ன? அவரை விட்டால் இவர் என்று மக்கள் ஒப்பந்தமா போட்டிருக்கிறார்கள்? மூன்றாவது ஒருவருக்கு வாய்ப்புக்கொடுத்துப்பார்ப்போமே என்று நினைப்பதை இருவருமே தடுக்க முடியாதே


சமீபத்திய செய்தி