உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அடுத்த வருஷம் மறந்துடுவாங்க!

 அடுத்த வருஷம் மறந்துடுவாங்க!

சென்னை, திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் என, 1,500 பேருக்கு, பேன்ட் - சட்டை, புடவை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல, மணலி தி.மு.க., மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில், 10,000 பேருக்கு, பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது. திருவொற்றியூர், 12வது வார்டு கவுன்சிலர் கவி.கணேசன் சார்பில், தி.மு.க., மூத்த தொண்டர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பேன்ட் - சட்டை, புடவை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதை வாங்கிய தி.மு.க., தொண்டர் ஒருவர், 'போன வருஷம் பொங்கலுக்கு யாரும் கண்டுக்கல... இந்த வருஷம், தேர்தல் வருதுன்னதும் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்களே...' என புலம்ப, சக தொண்டர், 'அடுத்த வருஷம் பொங்கலுக்கு நம்மை மறந்துடுவாங்கப்பா...' என்றபடியே, நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 14, 2026 22:18

தேர்தலை முன்னிட்டு முகவர்களுக்கு பேண்டு சட்டை புடவை கரும்பு. நாலரை ஆண்டுகளில் கொள்ளையடித்ததில் 10% செலவினம். அடுத்த ஐந்தாண்டு கொள்ளையடிப்பற்கு போடப்படும் அடித்தளம்.


D.Ambujavalli
ஜன 14, 2026 06:05

ஹூம், வருஷா வருஷம் தேர்தல் வரக்கூடாதா என்று மக்களைப்போலவே, இவர்களும் ஏங்க வேண்டியதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை