வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதைவிடக் கட்சியை நாடி பிடித்து அழகாக விமர்சிக்க யாராலும் முடியாது
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி சார்பில் நடந்த, தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட விழாவில், நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு தேர்த் திருவிழா நடந்தது.இதில் இடம்பெற்ற இன்னிசைக் கச்சேரி மேடையில், விழாக் குழுவினரை கவுரவிக்கும் நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி முன்னிலையில், தலைவர் சுசீலா, துணைத் தலைவர் வாசிம் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். விழாவில், தி.மு.க., நகர செயலரான ராமசாமி பேசுகையில், 'மாநில முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். இதுவரை மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு மாதத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை கொடுக்கப்படும்...' என்றார். இதைக் கேட்ட பெண் ஒருவர், 'இப்படித்தான் மாசா மாசம் சொல்றாங்க... ஆனா, எங்க தர்றாங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்த மற்றொரு பெண், 'தேர்தலுக்கு முன்னாடி கண்டிப்பா தந்துடுவாங்க அக்கா...' என்றபடியே சிரித்தார்.
இதைவிடக் கட்சியை நாடி பிடித்து அழகாக விமர்சிக்க யாராலும் முடியாது