உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கமிஷனை கரெக்டா கொடுங்க!

கமிஷனை கரெக்டா கொடுங்க!

சென்னை பூந்தமல்லி நகராட்சி கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் காஞ்சனா தலைமையில் நடந்தது; கமிஷனர், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன் பேசுகையில், 'நான் எதிர்க்கட்சி என்பதால், முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து, நகராட்சியில் ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு லஞ்சம்வாங்குகின்றனர் என, என்னிடம் கேட்டனர்' என்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு, ஆளுங்கட்சிகவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதை பார்த்து ஆவேசமடைந்த நகராட்சி தலைவர், 'கவுன்சிலர்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது; எல்லாருக்கும் மாத்திரை கொடுங்கள்...' என்றார். இதைக் கேட்ட அதிகாரி ஒருவர், 'கமிஷன் பணத்தை கரெக்டா கொடுங்க... அப்புறம் ஏன் கவுன்சிலர்கள் கொதிக்க போறாங்க... தலைவரம்மாவுக்கு இது தெரியலையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 10, 2024 06:29

கூட்டுக களவாணிகள் கொள்ளைப்பணத்தை பங்கிடுவதில் கூட ‘நேர்மை’ இல்லாததால்தான் இந்த கலாட்டா மக்கள், தொகுதி, தெண்ணீர், சுகாதாரம், சாலை வசதி எல்லாம் கூட்டங்களில் பேசக்கூடாத கெட்ட வார்த்தைகள்


சமீபத்திய செய்தி