உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அவரிடம் போய் ஸாரி கேட்கிறாரே!

 அவரிடம் போய் ஸாரி கேட்கிறாரே!

முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கர் சமீபத்தில் பெரம்பலுாரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'கடந்த ஆட்சியில் முக்கிய பிரச்னைகளின் போது, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், தன் விளக்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தார். ஆனால், தற்போதைய முதல்வர் விஜய் எதுவும் பேசுவது இல்லை. 'பாலியல் குற்றங்கள், லாக்கப் மரணங்கள், காவல் துறை அத்துமீறல்கள் என பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில், 'லாக்கப்' மரணங்கள் நடந்தால், அந்த குடும்பத்தினரிடம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தது உண்டு. அதை அன்று விஜய் கிண்டல் செய்தார். ' ஸாரி சொல்லாதீங்க சி.எம்., சார். எங்களுக்கு நீதி தான் வேண்டும்' என்றார். ஆனால், இன்று அந்த ஸாரி சொல்லக்கூட முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லை' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், ' ஸாரி சொல்றது தப்புன்னு சொன்னவரிடம் போய் ஸாரி கேட்கிறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூலை 21, 2026 19:16

சட்டம் ஒழுங்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் தன் நிர்வாகத்தில், பாலியல் குற்றங்கள், லாக்கப் மரணங்கள், காவல் துறை அத்துமீறல்கள் நடக்காமல் மக்களை காக்க வேண்டும். நடந்த பின் மன்னிப்பு கோருவதோ, நிவாரணம் கொடுப்பது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக சொல்வது எல்லாம் Miss management. தூய ஆட்சிக்கு அழகல்ல