| ADDED : நவ 11, 2024 10:19 PM
பெரம்பலுார் மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சிவசங்கர், பெரம்பலுார் தி.மு.க., - எம்.பி., அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அருண் பேசுகையில், 'பெரம்பலுார் மருத்துவ கல்லுாரி திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருப்பதாக, சுகாதார அமைச்சரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ஓராண்டாக இத்திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். இங்கு கண்டிப்பாக மருத்துவ கல்லுாரி துவங்கப்படும். அதற்கான பணியை செய்து வருகிறேன்எனவும் தெரிவித்தார். என்னிடம் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. நான் சின்ன பையன்; அவர் சீனியர்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தம்பி இவ்வளவு தன்னடக்கமாஇருக்காரே...' என முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'தந்தை நேருவோட பயிற்சியா இருக்கும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.