உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சரியான பதிலடி கொடுத்தாரு!

சரியான பதிலடி கொடுத்தாரு!

சில மாதங்களுக்கு முன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., டேவிட் செல்வின், துாத்துக்குடியில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'த.வெ.க.,வினரை அணில் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்கிறார். அணிலை அனைவரும் வீட்டுக்குள் அனுமதிப்பர்; பாசத்தோடு நடத்துவர். ஆனால், புலி என கூறிக் கொள்ளும் சீமான் ஒரு நச்சு எலி. யாரும் வீட்டுக்குள் நச்சு எலியை அனுமதிப்பது இல்லை; அடித்து விரட்டி விடுவர். 'நயன்தாரா வந்தால் கூட கூட்டம் வரும் என்று சீமான் கூறுகிறார். நடிகை விஜயலட்சுமி வந்தாலும் கூட்டம் வரும்; அந்தம்மாவுக்கு என்ன பிரச்னை என கேட்க பலரும் வருவர்...' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'சபாஷ்... சீமானுக்கு சரியான பதிலடி கொடுக்க, நமக்கும் ஒருத்தர் இருக்காருப்பா...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி