உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தூள் தூளாக்கி ஜெயிச்சிடுவார்!

தூள் தூளாக்கி ஜெயிச்சிடுவார்!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், சமீபத்தில் ஈரோடு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'மாநில அளவில் இதுவரை, 17 ஆயிரம் டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த இரண்டாண்டுகளை ஒப்பிடுகையில், டெங்கு பாதிப்புகள் படிப்படியாக குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. 'தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், த.வெ.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேட்பாளருக்கு எதிர்ப்பு இருப்பது போல, எதிர்க்கட்சியினர் துாண்டுதலில், ஆங்காங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன. சில கட்சிகள் திட்டமிட்டே எதிர்ப்பு அலை இருப்பது போல செய்திகளை பரப்புகின்றன' என்றார்.இதை கேட்ட நிருபர் ஒருவர், 'எந்த எதிர்ப்புகள் இருந்தாலும், இவரது தலைவர் விஜய், சினிமா மாதிரி எல்லாத்தையும் அடிச்சு துாள் துாளாக்கி ஜெயிச்சிடுவார் பாருங்க' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !