வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிறந்த அந்தக் குழந்தை எதிர் காலத்தில் பெரிய அரசியல்வாதி ஆகிவிடும் இப்போதே ‘வசூல்’ வேட்டையை ஆரம்பித்துவிட்டதே
சென்னை, வேளச்சேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,ஹசன் மவுலானா அலுவலகம், திருவான்மியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்திலேயே இயங்கி வருகிறது. சமீபத்தில், எம்.எல்.ஏ., பிறந்தநாளைமுன்னிட்டு, மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு, ஹசன் ஆதரவாளர்கள் தங்க மோதிரம் வழங்கினர்.தன் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபின், காரில் ஏறச் சென்றார் ஹசன். அப்போது, வேகமாகவந்து நின்ற ஆட்டோவில் ஒரு கர்ப்பிணி, பிரசவ வலியால் துடித்ததை பார்த்த ஹசன் காரில் ஏறாமல், கூடியிருந்த கூட்டத்தை மின்னல் வேகத்தில் அகற்றி, பிரசவ அறைக்கு கர்ப்பிணி செல்ல ஏற்பாடு செய்தார்; சற்று நேரத்தில், அப்பெண்ணுக்கு குழந்தை பிறக்க, அதற்கும் மோதிரம் வழங்கப்பட்டது. பிரசவம் பார்த்த நர்ஸ் ஒருவர், அப்பெண்ணிடம், 'உன் குழந்தை அதிர்ஷ்டமான குழந்தைதான்... எம்.எல்.ஏ., வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்னாடியே பிறந்து, தங்க மோதிரம் வாங்கிடுச்சே...' எனக் கூற, சுற்றியிருந்த உறவினர்கள் மகிழ்ச்சியில் சிரித்தனர்.
பிறந்த அந்தக் குழந்தை எதிர் காலத்தில் பெரிய அரசியல்வாதி ஆகிவிடும் இப்போதே ‘வசூல்’ வேட்டையை ஆரம்பித்துவிட்டதே