உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அவரையே எதிர்க்க துணிஞ்சிடுச்சே!

அவரையே எதிர்க்க துணிஞ்சிடுச்சே!

அன்புமணி அணியில் உள்ள பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலர் என்று கூறியவர்கள் எல்லாம் இன்றைய தினம் காணாமல் போய் விட்டனர். பா.ம.க., என்பது ஒன்று தான். ஆனால், சட்ட ரீதியாக ஒரு அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அன்புமணி தெளிவாக செய்து கொண்டிருக்கிறார். 'ராமதாஸ் வேறு அணி, அன்புமணி வேறு அணி என்பதெல்லாம் எங்களுக்கு இல்லை. ராமதாஸ் துணிச்சலாக எதையும் விமர்சனம் செய்யலாம் என சொல்லிக் கொடுத்ததன் அடிப்படையில் தான், எங்கள் விமர்சனங்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ராமதாஸ் கற்று தந்த துணிச்சல், இன்று அவரையே எதிர்க்கும் அளவுக்கு போயிடுச்சே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 10, 2025 18:53

ஏன், இவர்கள் கட்சி செய்த கருத்துக் கணிப்பிற்காக மதுரையில் மூன்று உயிர்கள் எரிக்கப்பட்டதையும் சேர்த்துக்கொள்ளலாமே


நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 05:38

கேள்வி கேட்பது தப்பா, இதுவே இப்படி திமுகவில், sdpi , pfi , மனிதநேய மக்கள் கட்சியில் என்று கேட்டிருந்தா என்னவாயிருக்கும் என்பதனை புதுக்கோட்டையில் ஒரு பாயை, அண்ணாநகர் ரமேஷ் , வேலூர் CA, ராமலிங்கம் போன்றோரை கொன்றபோது கண்டுள்ளோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை