உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எப்படி ஓட்டு போடுவாங்க?

எப்படி ஓட்டு போடுவாங்க?

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. இதில், பழையனுார், திருவாலங்காடு, வேணுகோபாலபுரம், வீரராகவ புரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதி மக்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முகாமில், திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்றார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், குத்துவிளக்கு ஏற்றி வைக்க அவரிடம் அதிகாரிகள் மெழுகுவர்த்தியை கொடுத்த போது, அதை பெறாமல் ஒதுங்கியவர், அங்கிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர் துாவி மரியாதை மட்டும் செய்தார். இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'ஈ.வெ.ரா., கொள்கையை எம்.எல்.ஏ., கையில் எடுத்துட்டாரோ...' என கேட்க, அருகில் இருந்தவர், 'தேர்தல் வர்றப்ப இப்படி எல்லாம் நடந்துக்கிட்டா, மக்கள் எப்படி ஓட்டு போடுவாங்க...?' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 19, 2025 17:06

'யார் எப்படி இருந்தாலும், யாரை ஆதரித்தாலும் எங்களுக்கு தேர்தல் நேரத்தில் வரவேண்டியதைக் கணிசமாக உயர்த்திக்கொடுத்தால் போதும் ' என்று மக்கள் உள்ளவரை இவர்களைக் கேட்பார் யாருமில்லை


Balasubramanyan
ஆக 19, 2025 14:00

Dravida Tamizan.


Anantharaman Srinivasan
ஆக 19, 2025 00:44

திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரனிடம் அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க மெழுகுவர்த்தியை கொடுக்காமல், ஒரு கொத்து ஊதுபத்தியை கொடுத்திருந்தால், அதை வாங்கி கருணாநிதி படத்துக்கு வைத்திருப்பார்.


முக்கிய வீடியோ