உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவரை பார்த்து கத்துக்கணும்!

இவரை பார்த்து கத்துக்கணும்!

திருப்பூர், முதலிபாளையம், 'நிப்ட் - டீ பேஷன்' கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி, 'நாஸ்காம்' இயக்குநர் உதயசங்கர் பேசும்போது, 'நான், அன்புக்கு கட்டுப்பட்டவன். பட்டமளிப்பு விழாவுக்காக, கல்லுாரி நிர்வாகிகள் அன்போடு அழைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது, என் வீட்டு விழாவில் பங்கேற்றது போன்ற உணர்வை தருகிறது. நான் ஏராளமான மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன்.'இந்த உலகத்தில் பெரிசா என்ன சம்பாதிச்சிருக்கேன்னு யாராவது கேட்டால், நல்ல மனிதர்களை சம்பாதித்துள்ளேன் என்பேன். மனிதர்களை சம்பாதிக்கிற சுகம் இருக்கிறதே... அது என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்...' என்றார்.முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'பணத்தை சம்பாதிக்க ஆலா பறக்கிற இந்த காலத்துல, மனிதர்களை சம்பாதிக்கிறதை பத்தி பெருமையா பேசும் இவரை பார்த்து, நம்ம பசங்க கத்துக்கணும்...' எனக் கூற, அருகில் இருந்தவர் ஆமோதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 10, 2025 03:41

படித்துப் பட்டம் பெற்று மனிதர்களை சம்பாதித்துவிட்டால், வேலை சம்பளம் என்று தானே வந்து கொட்டுமா? என்று விழாவுக்கு வந்த மாணவர்களும், பெற்றோரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்


சமீபத்திய செய்தி