| ADDED : டிச 09, 2024 12:07 AM
'பெஞ்சல்' புயலால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த, ஏழு பேரின் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில், தலா, 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் பேசுகையில், 'சென்னை, பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது' என்றார்.உடனே நிர்வாகி ஒருவர், 'பல்லாவரத்தில் இறந்தவங்க குடும்பத்திற்கும், அடுத்து நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டால், நம் தலைவரது செல்வாக்கு அதிகரிக்குமே...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'நம்ம தலைவரின், 'கஜானா'வை காலி பண்ண ஐடியா தர்றியா...?' என, சிரித்தபடியே கிளம்பினார்.