உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கவுன்சிலருக்கே மதிப்பில்லையா?

கவுன்சிலருக்கே மதிப்பில்லையா?

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது; இதில், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜகுமாரி பேசுகையில், 'என் வார்டில் பழுதான மின் கம்பங்கள் சாயும் நிலையில் உள்ளன. இது குறித்து, அதிகாரிகளிடம் இரு ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்; யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்கு முன்பாக மாற்றாவிடில், சாய்ந்து பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும்...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அடப்பாவமே... ரெண்டு வருஷமா சொல்லியும், பழுதான மின் கம்பங்களை மாத்தி தராம இருக்காங்களா... ஆளுங்கட்சி கவுன்சிலர் கோரிக்கைக்கே மின்வாரிய அதிகாரிகள் மதிப்பு தரலைன்னா, சாதாரண மக்கள் பேச்சுக்கெல்லாம் எங்க மதிப்பு இருக்கும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி