வாசகர்கள் கருத்துகள் ( 1 )
MLA பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைந்தவர்களுக்கே இடைத்தேர்தலில் சீட் தரபோவதில்லை என்கிறார் விய். வளர்மதிக்கு சீட்டா..? ஒருகாலும் கிடைக்காது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வளர்மதி; கடந்த வாரம் சென்னை சென்று த.வெ.க.,வில் இணைந்தார். சென்னையில் இருந்து விமானத்தில் சமீபத்தில் திருச்சி வந்த இவர், அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க.,வில் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி பேசியதால், அங்கிருந்து வெளியேறி விட்டேன். அதனால், அ.தி.மு.க.,வின் இன்றைய நிலை பற்றி நான் என்ன சொல்ல முடியும் ? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில், நான் போட்டியிடுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'திருச்சி கிழக்கில் 'சீட்' கிடைத்து ஜெயிச்சிட்டா, மறுபடியும் அமைச்சர் ஆகலாம் என்ற கனவில் இருக்காங்களோ...?' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
MLA பதவியை ராஜினாமா செய்து தவெக வில் இணைந்தவர்களுக்கே இடைத்தேர்தலில் சீட் தரபோவதில்லை என்கிறார் விய். வளர்மதிக்கு சீட்டா..? ஒருகாலும் கிடைக்காது.