உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

 அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பல்வேறு கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தவர், விஜய் குறித்து கேட்டதும், ஆவேசமானார். அப்போது அவர் கூறுகையில், 'கரூரில் 41 உயிர்கள் பலியானதற்கு, நடிகர் விஜய் மீதும் தவறு இருக்கிறது. ஆனால், கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சியின் துவக்க நாளில் டான்ஸ் ஆடுகிறார்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ஆரம்பத்துல விஜய், கூட்டணிக்கு வருவார் என்ற ஆசையில், கரூர் சம்பவத்துக்கு தி.மு.க.,தான் காரணம்னு சொன்னாங்க. இப்ப கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என்பது தெரிந்ததும், அந்த சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்னு போட்டு தாக்குறாங்களே...' என, முணுமுணுத்தார். அருகிலிருந்த மூத்த நிருபரோ, 'வேணும்னா ஒரு பேச்சு, வேண்டாம்னா ஒரு பேச்சு என்பதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 08, 2026 06:58

தி விஜய், பாஜகவுடன் இணைந்து அவர்கள் quota வில் நாலு சீட் வாங்கி கூட்டணியில் சேர்ந்து விடவும் வாய்ப்பிருக்கிறது அப்போது இந்தப்பாடலின் ராகம், தாளம் எல்லாம் மாறிவிடும் இவர்கள் அறிக்கைகளைக் கேட்டும் படித்தும் மக்கள் முட்டாள்களாகவே இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்


முக்கிய வீடியோ