வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாவம், இத்தகைய திட்டம் பிறக்கும் முன்பே இறுதியை எட்டிவிடும் அப்படியே வெற்றி பெற்றால், ‘நாங்கள் அறிமுகப்படுத்தியதற்கு விஜய்,காப்பி பேஸ்ட் செய்கிறார்’ என்று விமர்சிக்க ஒரு சான்ஸ்
தி.மு.க., மாணவரணி சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்ட, உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சில தினங்களுக்கு முன் சென்னை, அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தி.மு.க., மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். உதவி மையம் குறித்து, தி.மு.க., மாணவரணி செயலர் வீரமணி கூறும்போது, 'பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எங்கு, என்னென்ன படிப்பு படிக்கலாம் என்பது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும். 'நான் முதல்வன்' போன்ற தி.மு.க., அரசின் திட்டங்கள் குறித்தும், இந்த உதவி மையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வேறு யார் ஆட்சி அமைச்சாலும் பின்பற்றக் கூடிய திட்டமா இருக்குமா இது...' எனக் கேட்டார்; மூத்த நிர்வாகிகள் பலரும், 'திருதிரு'வென்று விழித்தனர்.
பாவம், இத்தகைய திட்டம் பிறக்கும் முன்பே இறுதியை எட்டிவிடும் அப்படியே வெற்றி பெற்றால், ‘நாங்கள் அறிமுகப்படுத்தியதற்கு விஜய்,காப்பி பேஸ்ட் செய்கிறார்’ என்று விமர்சிக்க ஒரு சான்ஸ்