இதை சிந்திச்சா நல்லாயிருக்கும்!
தி.மு.க., மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ரங்கநாதனின் 25வது பிறந்த நாளை ஒட்டி, ராகேஷ் அறக்கட்டளை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் இணைந்து, நீதி மற்றும் சமத்துவம் குறித்த சொற்பொழிவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அரங்கில் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா பேசுகையில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் விதிகள் மீறப்படுகின்றன. இதனால், மக்களின் காதுகளிலும், மூளையிலும் எவ்வளவு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை, நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்' என்றார். வழக்கறிஞர் ஒருவர், 'வாஸ்தவம் தான்... ஆனா, தொழில் வளர்ச்சி என்று சொல்லி, மரங்களை வெட்டி தள்ளுறவங்க, இதை எல்லாம் சிந்திச்சா நல்லாயிருக்கும்' எனக் கூற, சக வக்கீல்கள் ஆமோதித்தனர்.