உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘அறிவுரையை கேட்டா நல்லாயிருக்கும்!’

‘அறிவுரையை கேட்டா நல்லாயிருக்கும்!’

மதுரை அரசு மருத்துவமனையில், இதய நோய் விழிப்புணர்வு விழா சமீபத்தில் நடந்தது. நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசும்போது, ‘டாக்டர்கள் இதயத்தை பற்றி பேசலாம். நான் என்ன பேசுறது என கேட்டேன். ‘உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்’ என்றனர். ‘ஸ்மோக்கிங், டிரிங்கிங்’ வேண்டாம் நண்பர்களே... எனக்கு இந்த பழக்கங்கள் கிடையாது. ‘பள்ளி பருவத்தில் இருந்தே புகை வாடை எனக்கு பிடிக்காது. சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும்போது எனக்கு புகை பிடிக்க தெரியாது. இரவு நேரத்தில் புகை பிடித்து பழகிய பின் அந்த காட்சிகளில் நடித்தேன். அதன்பின் புகை பிடிப்பதாக நடிக்கவில்லை. அதனால் தான், ‘அட்வைஸ்’ பண்ணுகிறேன். எந்த போதை பழக்கத்திற்கும் அடிமையாகாதீர்கள்’ என்றார். ‘இப்ப இருக்கும் இளைய நடிகர்களும், இவரது அறிவுரையை கேட்டு நடந்தா நல்லாயிருக்கும்’ என டாக் டர் ஒருவர் முணுமுணுக்க, சக டாக்டர்கள் ஆமோதித்தன ர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை