உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / உண்மையை மட்டும் சொல்லலை!

உண்மையை மட்டும் சொல்லலை!

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, 'டெல்டா மாவட்டங்களில், 60 சதவீதம் நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால், மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து விட்டன. ஆனால், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பருவமழை திடீரென்று வந்து விட்டதாக கூறுகிறார். 'முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன், சட்டசபையில் பேசும்போது, பருவகால நிலையை அறிந்துகொள்ள, 10 கோடி ரூபாய்க்கு, 'டெக்னிக்கல் மிஷின்' வாங்கியதாக தெரிவித்தார். 10 கோடிக்கு வாங்கிய அந்த மிஷின் எங்கே? அப்போதைய நிதியமைச்சர் கூறியது பொய்யா இல்லை, வேளாண் அமைச்சர் சொல்வது பொய்யா...?' என்றார். நிருபர் ஒருவர், 'யார் பொய் சொன்னாங்கன்னு தெரியலை... ஆனா, ரெண்டு பேருமே உண்மையை சொல்லவில்லை என்பது மட்டும் உறுதியா தெரியுது...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 06, 2025 06:18

அழகுக்காக ஆயிரம் டெக்கனிகல் சாதனங்களை வாங்கினால், அதையெல்லாம் உபயோகித்து காலநிலையை அறிய முடியுமா? Budget இல் கணக்கு காட்டி, கணிசமாக ‘அடிக்க’ தானே அதையெல்லாம் வாங்குகிறோம்


முக்கிய வீடியோ