வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடுத்து இன்னொரு அமைச்சர் 50 % என்பார்1 உண்மையான 10% மெல்ல மெல்ல வெளிவந்துவிடும்
மேலும் செய்திகள்
'லென்ஸ் வச்சு தான் தேடணும்!'
16-Feb-2026
மாநில திட்டக்குழு உறுப்பினரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான எழிலன் நாகநாதன், சமீபத்தில் விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலுக்காக, 505 வாக்குறுதிகளை அளித்தது. இவற்றில், 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள, 101 வாக்குறுதிகள், மத்திய அரசின் நிதி சார்ந்த அனுமதியின்றி நிற்கின்றன. 'தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில், 84 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், 2016ல் அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் வெறும் 12 சதவீதத்தை தான் நிறைவேற்றியுள்ளனர்' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், '90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிட்டோம்னு முதல்வர் சொல்றார்... அவர் சொல்றதுக்கும், இவர் சொல்றதுக்கும் கணக்கு உதைக்குதே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
அடுத்து இன்னொரு அமைச்சர் 50 % என்பார்1 உண்மையான 10% மெல்ல மெல்ல வெளிவந்துவிடும்
16-Feb-2026