| ADDED : ஜூலை 01, 2025 10:21 PM
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசுகையில், 'வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு, போக்குவரத்து கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.'ஜூலை 25ம் தேதி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள். ஒற்றுமையுடன் செயல்பட்டு, தேர்தலுக்கு தயாராக வேண்டும். மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும்' என்றார்.மூத்த தொண்டர் ஒருவர், 'முதல்ல அப்பாவுடன் இணைந்து இவர் செயல்படட்டும்... அப்புறமா, ஒற்றுமை பற்றி பேசட்டும்...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.